நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து; நிலநடுக்கம் போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தியது: பாதிக்கப்பட்டவர் 

சுபாங்:
எரிவாயு குழாய் தீ விபத்து நிலநடுக்கம் போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 17 வயதுட்டைய டான் ஜியா ஷின் இதனை கூறினார்.

இன்று காலை  ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்தது.

சம்பவம் நடந்த நேரத்தில் தனது கர்ப்பிணியான தாய், தந்தை, இரண்டு உடன்பிறந்தவர்களுடன் வீட்டிற்குள் இருந்தோம்.

காலை 8 மணியளவில் பலத்த நடுக்கத்தை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

நாங்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தபோது தீ பற்றி எரிவதைக் கண்டோம். சம்பவம் நடந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு  லோரோங் தொலைவில் இருந்தது.

அந்த நேரத்தில், கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே நாங்கள் நினைத்தோம்.

தீயணைப்புத் துறையின் உதவியுடன் கார் உட்பட எதையும் எங்களுடன் எடுத்துச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset