நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து: 25 பேருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  25 பேருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயு குழாய் வெடித்ததில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 25 பேர் தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆலயத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதார அமைச்சின் பல பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளித்து வருவது கண்டறியப்பட்டது.

அவர்களில் பெரும்பாலோருக்கு தீக்காயங்கள், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஐந்து பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தில் பல வீடுகளும் எரிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது, இதனால் குழாயின் 500 மீட்டர் தீப்பிடித்தது. பின்னர் தீ பல வீடுகளுக்கு பரவியதால், குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க ஒரு தற்காலிக  மையம் திறக்கப்பட்டது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset