நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் பூச்சோங் பெர்டானாவில் எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்தது

பூச்சோங்:

தாமான் பூச்சோங் பெர்டானாவில் எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்தது.

சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பூச்சோங் பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இது தாமான் பூச்சோங் பெர்டானாவில் எரிவாயுக் குழாய் தீப்பிடித்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்பதை அவர்  உறுதிப்படுத்தினார்.

காலை 8.23   மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

இதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, குழாயின் 500 மீட்டர் பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் ஒரு குடியிருப்பு பகுதிக்கு அருகில் நடந்தது.

மேலும் தீயணைப்பு வீரர்கள், பிற நிறுவனங்களுடன் சேர்ந்து அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset