நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களின் போது மக்கள் அமைதியான, இணக்கமான சூழ்நிலையில் அதைக் கொண்டாடுவதை உறுதி செய்வதற்காக பணியில் ஈடுபட்டிருக்கும்  போலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.

அதே வேளையில் தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வைப் பேணுவதை உறுதி செய்வதில் போலிஸ் அதிகாரிகள்,

குறிப்பாக எல்லைகளைப் பாதுகாப்பவர்கள், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது.

இந்தப் பணி எளிதானது அல்ல என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.

மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் லெபரான் பண்டிகையைக் கொண்டாடும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உங்கள் ஆணையை நீங்கள் இன்னும் நிறைவேற்றுகிறீர்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் வெளியில் இருக்க வேண்டியிருந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் ரசாருதீன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், அவர்களின் பங்களிப்புகள் மறக்கப்படாது என்பதை வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset