
செய்திகள் மலேசியா
பட்டாசு விற்பனை கூடாரம் தீப்பற்றி எரிந்தது: ஒருவர் படுகாயம், 3 பேர் காயம்
சபாக் பெர்ணம்:
கம்போங் பத்து 39 இல் பட்டாசு விற்கும் கூடாரம் இன்று அதிகாலை தீப்பிடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் குறித்து தனது துறைக்கு அதிகாலை 1.08 மணிக்கு அழைப்பு வந்தது,
சபாக் பெர்னாம் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் எட்டு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது. 20 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆண்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர்.
ஒருவருக்கு இடது கால், வலது கால், வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2025, 9:43 pm
அமெரிக்காவின் உயர் வரியால் மலேசியா பொருளாதார மந்த நிலையை சந்திக்காது: பிரதமர் உறுதி
April 6, 2025, 9:42 pm
எரிவாயு குழாய் தீ விபத்து: குத்தகையாளர், தொழிலாளர்கள் உட்பட 15 நபர்களிடம் வாக்குமூ...
April 6, 2025, 9:40 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன: போலிஸ்
April 6, 2025, 9:39 pm
புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலிஸ் துறையை மக்கள் நம்ப வேண்டும்: சைபுடின்
April 6, 2025, 9:37 pm
இந்திய மாதுவின் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை போலிசார் தேடி வருகின்றனர்
April 6, 2025, 9:35 pm
161 ஆலயங்கள் தேசிய திவால் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளன; மாரான் உட்பட பல ஆலயங்கள...
April 6, 2025, 7:50 pm
உலக நெறிமுறை தினத்தில் மனச்சாட்சியோடு வாழ பழகிக்கொள்வோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்...
April 6, 2025, 6:24 pm
முகநூல் விளம்பர மோசடி: RM 651,800 இழந்த ஆடவர்
April 6, 2025, 4:55 pm
ஆலய ஒழுங்குமுறை அமைப்பை அமைக்க பிரதமர் துறைக்கு மலேசிய இந்து சங்கம் கோரிக்கை
April 6, 2025, 12:49 pm