நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்து: 78 வீடுகள், 10 கடைகள் எரிந்து நாசமானது: தீயணைப்புப்படை

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்து சம்பவத்தில் 78 வீடுகள், 10 கடைகள் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது.

மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது இதனை தெரிவித்தார்.

நேற்று புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் நிலத்தடி எரிவாயு குழாய் தீ விபத்தில் 88 கட்டடங்கள்  எரிந்து நாசமானது.

88 கட்டடங்களில் 78 வீட்டுகள், 10 கடைவீதி  அடங்கும்.

வீட்டுத் தீ வகை 10 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். அதே நேரத்தில் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 237 வீடுகள் சேதமடைந்தன. 305 பேர் பாதிக்கப்பட்டனர். 

பெரும்பாலானோர் தீக்காயங்கள், வெப்பத் தாக்கத்தால் காயமடைந்தனர்  என்று சம்பவ இடத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

இந்த தீ விபத்தில் மொத்தம் 365 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

அதில் 275 கார்கள்,  56 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்றும், மேலும் 33 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset