நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய மோசடி: 11 வாரங்களில்  655 மில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலம்பூர்:

இந்த ஆண்டின் முதல்  11 வாரங்களில் மட்டும் 655 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை மக்கள்  இழந்துள்ளனர்.

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் புள்ளி விவரங்கள் இதை குறிக்கிறது.

இந்த நாட்டில் இணைய மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இதன் புள்ளி விவரங்கள் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

கடந்த  மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 10,218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 655.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன. மேலும் 11,616 விசாரணை ஆவணங்கள் மேலதிக விசாரணைக்காக திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் புள்ளி விவரங்கள் 7,576 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தது.

இருப்பினும், 11 வாரங்களில் வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்த இழப்பு கடந்த ஆண்டு 514.6 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset