
செய்திகள் மலேசியா
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்காதீர்: ஒற்றுமை துறை அமைச்சர் அமைச்சு
புத்ராஜெயா:
சமூக ஊடகங்களில் இனவாதத்திற்கும் பிரிவினைத் தூண்டுதலுக்கும் வழிவகுக்கும் வகையில் பதிவு செய்யப்பட்ட கருத்து தொடர்பில் மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்தார்.
இது குறித்த விரிவான விசாரணையை மேற்கொண்டு, 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் 233ஆம் பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“மலேசியர்களுக்கிடையிலான ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பது ஒற்றுமைத் துறையின் முக்கியக் கடமையாகும். எனவே, ஒற்றுமையை பாதிக்கும் எந்தவொரு செயலையும், வெறுப்பைத் தூண்டும் எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நெறிமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும்
“அனைத்து தரப்பினரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது நெறிமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும். இனத்துவேஷம் மற்றும் மதத்தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டும்,” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், எவ்வித வன்முறையும், சதி தூண்டுதலும், அவதூறும் நாட்டின் அமைதியை பாதிக்கக்கூடாது என்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மார்ச் 5 மற்றும் மார்ச் 26 ஆகிய தேதிகளில், ஒரு எக்ஸ் பயனர் இனத்துவேஷத்திற்கும் வன்முறைக்கும் வழிவகுக்கும் வகையில் பதிவிட்ட 2 வகையான கருத்துகள் வைரலாக பகிரப்பட்டன. எனினும், சமீபத்திய தகவலின்படி, அந்த பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 10:46 am
மலேசியா 24 சதவீத வரியை எதிர்கொள்ளும்: அமெரிக்க அறிவிப்பு
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm