நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில்  பெருநாள் தொழுகையில்  2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

ஈப்போ:

வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று 2025 ஆண்டு ஹிஜ்ரி 1446 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் 29 நாட்கள் நோன்பிருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து, அல்லாஹு வை நெருங்குகிற ஒரு மாதமாக புனித ரமலான் மாதம் இருந்து வருகிறது.

இஸ்லாத்தில் ஏழைகளை கௌரவிப்பது மிகவும் முக்கியமான நல் அமல்களாக இருக்கிறது. 

அதனால் அந்த ஈகை திருநாளில் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவது இந்த நாளில் மிகவும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான தாக இருக்கிறது.

அந்த ஈதுல் பித்ரு இந்த நன்னாளில் ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான பேர்கள் வெளிநாட்டு மக்கள் உட்பட அனைவரும் அந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்கள்.

ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டார்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை வெளிப்படுத்தினார்கள். உலக மக்களுக்காக  பிரார்த்திக்கப்பட்டது . 

காலை 8:30 மணியிலிருந்து சுமார் ஒன்பதரை மணி வரையிலும் தொழுகை தக்பீர் ,குத்பா, ஆகியவைகள் சிறப்பாக நடைபெற்றது.
 
இதில் உஸ்தாத் அப்துல் காதிர் உலவி உஸ்தாத் முஹம்மது யாசர் அராபத் மஹ்லரி,  உஸ்தாத் முஹம்மது அப்பாஸ் ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset