நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மியன்மார், தாய்லாந்தில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிலை தொடர்பாக கலந்துரையாட ஆசியானின் சிறப்பு அவசர கூட்டம்

கோலாலம்பூர்: 

மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆசியானின் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்பு அவசர கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

இந்த கூட்டத்திற்கு மலேசியாவின் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் தலைமை தாங்கினார் 

காணொலி வாயிலாக ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், பிரதிநிதிகள், மற்றும் பார்வையாளராக திமோர் லெஸ்தே அமைச்சரும் கலந்து கொண்டார் 

வெளியுறவு துறை அமைச்சின் இந்த கூட்டமானது ஆசியான் உறுப்பு நாடுகளின் எல்லைகளற்ற ஆதரவினை இது புலப்படுத்துவதாக டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார் 

இவ்வேளையில் மியன்மார், தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசியான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆசியான் உறுப்பு நாடுகளின் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆசியான் உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார். 

2025ஆம் ஆண்டு ஆசியான் நிர்வாக பொறுப்பினை மலேசியா ஏற்றுள்ளதால் மலேசியா இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset