நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெரும்பாலான அரபு நாடுகள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன

இஸ்தான்புல்:

பெரும்பாலான அரபு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்று ரமலான் நோன்பு மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஹரி ராயா  பெருநாளை கொண்டாடுவார்கள்.

அனடோலு ஏஜென்சி படி, சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளில் உள்ள மத அதிகாரிகள், இஸ்லாமிய நாட்காட்டியில் 10ஆவது மாதமான ஷவ்வால் மாதத்தின் பிறை சனிக்கிழமை காணப்பட்டதாக அறிவித்தனர்.

இது நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதே அறிவிப்பை ஏமன், ஈராக்கில் உள்ள சன்னி வக்ஃப் அலுவலகமும் வெளியிட்டது.

இருப்பினும், அமாவாசை காணப்படாததால் திங்கட்கிழமை பெருநாள் கொண்டாடுவதாக ஓமன் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset