நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு

மியான்மார்:

மியான்மாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,065 ஆக அதிகரித்தது.

மியான்மாரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,056-ஆக உயர்ந்துள்ளது, 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 270 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த பேரிடருக்கு மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு ஒரு வார தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதேபோல் மியான்மாரின் அண்டைநாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தாய்லாந்தில் இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. பாங்காக்கில், இடிந்து விழுந்த கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாக நம்பப்படும் 76 பேரைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset