நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்

ஜாகர்த்தா:

ஆச்சேவின் மேற்கே உள்ள கடல் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 இந்தோனேசிய வானிலை, காலநிலை, புவி இயற்பியல் நிறுவனம் இதை உறுதி செய்தது.

ஆரம்பத்தில் 5.4 ரிக்டர் அளவை அந்நிறுவனம் மதிப்பிட்டது. பின்னர் அதை 5.2 ஆக திருத்தியது.

இந்த நிலநடுக்கம் ஜாகர்த்தா நேரப்படி காலை 9.58 மணிக்கு ஏற்பட்டது.

இதன் மையப்பகுதி பண்டா ஆச்சேவிலிருந்து வடகிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 12 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது.

இந்நிலநடுக்கத்தின் வலிமை பண்டார் ஆச்சே, ஆச்சே பெசார், டேகன்கான், பிடி ஜெயா, சபாங் வரை பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி தணிப்புப் பிரிவின் தலைவரான டாரியோனோ இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset