நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி

ஜொகூர்பாரு:

நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாக மாநிலக் போலிஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் இரு வேறு விபத்துகளில் மொத்தம் நால்வர் உயிரிழந்தனர்.

விபத்து விகித அதிகரிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்துகிறோம். அதன்மூலமே விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

ஜொகூர்  போலிஸ் தலைமையகத்தில் உள்ள துங்கு லக்சமண அப்துல் ஜாலில் பள்ளிவாசலில் நடந்த போலிஸ் தலைவரின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset