நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காராக் சாலை  விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்

காராக்:

காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

நேற்று குவாந்தான் நோக்கிச் செல்லும் கோலாலம்பூர்- காராக் விரைவுச் சாலையில் கிலோமீட்டர் 50.8 இல் கோரமான சாலை விபத்து நிகந்தது.

இந்த விபத்தில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, லோரி ஓட்டுநர் ஒருவர் இன்று முதல் நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், 52 வயதான அந்த நபர் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக தடுப்புக்காவல் செய்யப்பட்டதாக பெந்தோங் மாவட்ட  போலிஸ் தலைவர் ஷாயிஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு ஏற்கனவே நான்கு சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் சிறுநீர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset