
செய்திகள் உலகம்
7.7ஆக ரிக்டரில் பதிவான பயங்கர நிலநடுக்கம் மியான்மாரை தாக்கியது
மியான்மார்:
மியான்மாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.7 ஆகப் பதிவாகியிருக்கிறது.
மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.
அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு மியான்மர் குலுங்கியதாகவும் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சகாய்ங்க் பகுதியில் இருந்த பழமையான ஆற்றுப் பாலம் சேதமடைந்திருக்கும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் கட்டடங்களுக்குள் இருந்து அச்சத்துடன் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் விடியோவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், நிலநடுக்கத்தின் போது குலுங்கி வெளியே கொட்டும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டிருந்ததாகவும்,
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am
இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்கள் திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்
March 30, 2025, 10:12 am
பெரும்பாலான அரபு நாடுகள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன
March 30, 2025, 9:07 am
இந்திய சிங்கப்பூர் முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை
March 29, 2025, 12:19 pm