நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

 சிங்கப்பூரில் ரயில்களைச் சோதிக்க துவாஸில் புதிய நிலையம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் ரயில் சோதனை நிலையம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

புதிய நிலையம் துவாஸில் அமைந்துள்ளது.

ரயில்சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது.

ரயில்களின் இயக்கத்தையும் முக்கியக் கட்டமைப்புகளையும் முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் நிலையத்தில் உள்ளன.

தற்போதுள்ள ரயில் தடங்களுக்கும் புதிதாக வரவிருக்கும் பாதைகளுக்கும் தேவையான சோதனைச் சாதனங்களும் அதில் இருக்கும்.

நிலப் போக்குரவத்து ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

புதிய நிலையம் நிறுவப்படுவதற்கு முன்பு நிலைமை வேறு.

புதிய ரயில்களும் ரயில் கட்டமைப்புகளும் சிங்கப்பூரில் சேவையில் ஈடுபடுத்தப்படும் முன்னர், முதலில் வெளிநாடுகளில் அவை சோதிக்கப்படும்.

ஆனால் இங்குள்ள நடைமுறைச் சூழலை வெளிநாட்டுச் சோதனை நிலையங்களால் முழுமையாகப் பிரதிபலிக்க இயலவில்லை என்றார் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர் (Amy Khor).

இங்கு வந்த பிறகு, புதிய ரயில்கள் சேவைத் தடங்களில் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதனால் பொறியியல் துறையினர் ரயில் தடங்களில் மேற்கொள்ளும் பணிகளுக்குக் குறைவான நேரமே இருந்தது.

புதிய நிலையம் அத்தகைய நெருக்கடியைத் தணிக்கவும் ரயில் கட்டமைப்பைக் கட்டிக்காக்கவும் உதவும் என்றார் டாக்டர் கோர்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset