நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய சிங்கப்பூர் முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை

சிங்கப்பூர்:

இந்திய முஸ்லிம் பேரவை தன் நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்வு பென்கூலன் பள்ளிவாசல் அரங்கில் நடத்தியது .

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) தலைமை நிர்வாகி ஹாஜி காதிர் மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவி சபீரா முபாரக் திருக்குர்ஆனில் இருந்து வசனங்களை ஓதி தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்தார் .

இந்திய முஸ்லிம் பேரவை துணைத்தலைவர் உபைதலி ஆங்கில மொழிபெர்ப்பை வாசித்தார். பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.

இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவர் ஹாஜி முஹம்மது பிலால்
அல்ஜீரியாவுக்கான சிங்கப்பூர் தூதர் முஹம்மது அலாமி மூசா, மேனாள் நியமன நாடாளுமன்ற உறுபலபினர்கள் டாக்டர் சையத் ஹாருன் அல்ஹப்ஷி , முனைவர் இரா. தினகரன், இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் இராஜன் கிருஷ்ணன், வளர்தமிழ் இயக்கத்தலைவர் நசீர்கனி, இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் இராஜாராம், மலாய் முஸ்லிம் அமைப்பினர் , இந்திய முஸ்லிம் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்களை வரவேற்றார்.

மேலும் அவருடைய உரையில் தீவு முழுவதும் 3200 குறைந்த வருமான குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கிய Tabung Amal Aidilfitri அமைப்புக்கும், நோன்பு கஞ்சி சமைப்பதற்கு அரிசியும், பேரீத்தம்பழம் வழங்கிய இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 850 குடும்பங்களுக்கு விழாக்கால தொகுப்புப் பை மற்றும் 120 வெள்ளி ரொக்க அட்டை வழங்கிய சிண்டாவுக்கும், தமிழை வரும் (2026 ) கல்வியாண்டில் இருந்து மத்ரஸா அல் இர்ஷாதில் தொடக்க நிலை ஒன்றில் தமிழ்ப்பாடம் இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும் என்ற நற்செய்தியை சமீபத்தில் வெளியிட்ட முயிஸ் மற்றும் அதற்கு உதவிய சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்திற்கும் , இஃப்தார் விருந்தின் ஆதரவாளர் ராயல் கிங்ஸ் குழுமத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிராஜுத்தீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் முகமாக இந்திய முஸ்லிம் பேரவை தன் இணை அமைப்புகளிடம் ரொக்க நன்கொடை வழங்க வேண்டுகோள் வைத்திருந்தது. அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி மற்றும் கலாச்சார சங்கம் , சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், டிஎம்ஒய் ஜுவல்லர்ஸ் , சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கம், 12 ஹவர்ஸ் மணிசேஞ்சர் ஹாஜி ஜியாவுதீன் உள்ளிட்ட இணை அமைப்பினர் பலரின் ரொக்க உதவிகளோடு இந்திய முஸ்லிம் பேரவை தன் நன்கொடையையும் சேர்த்து சிங்கப்பூர் வெள்ளி 15,400 ஐ ரஹ்மான் லில் ஆலமீன் பவுன்டேஷன் தலைமை நிர்வாகி அத்னான் அப்துல் ஹமீதிடம் வழங்கியது.

இந்திய முஸ்லிம் அமைப்பினர், மலாய் முஸ்லிம் அமைப்பினர், தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் ஓர் இடத்தில் கூடியது மிகச்சிறப்பான நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பதை உறுதி செய்தது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset