நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்ச்சி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது 

வாஷிங்டன்: 

வெள்ளை மாளிகையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க வாழ் முஸ்லிம்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார் 

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தம்மை வெற்றிப்பெற செய்த அமெரிக்க வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு டொனால்டு டிரம்ப் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் 

முஸ்லிம்களின் புனித மாதமாக ரமலான் மாதம் விளங்குகிறது. ஆக, அனைத்து அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று டிரம்ப் தெரிவித்தார் 

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவே தனது தலைமையிலான அமெரிக்கா நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.

முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தனது தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset