நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் படையால் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர்  கொல்லப்பட்டார்

காசா:

காசாவின் வட ஜெபலியா பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீஃப் கானு தங்கியிருந்த முகாமைக் குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் தொடுத்தது.

இதில் அவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த செய்தி ஊடகமான அல்-அக்ஸா தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கான சுகாதார அமைப்பு 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 18ஆம் நாள் முதல், இஸ்ரேல் படை காசா பகுதியின் பல இடங்கள் மீது வான் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களினால் குறைந்தது 830 பேர் உயிரிழந்தனர். 1787 பேர் காயமடைந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset