நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் வாழையிலை உணவு நிகழ்ச்சி - பள்ளி மாணவர்களின் வளர்ச்சி திட்ட நிதிக்கு சுமார் RM30,000 வசூல்

ஆயர் தாவார்

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வாழையிலை உணவு விழா மகிழ்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில், முன்னாள் மாணவர்களின் முழு ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இது கூட்டு முயற்சியின் வலிமையையும் இந்தியர்களின் உணவு பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது.

பள்ளி மாணவர்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவது இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும்  வாழையிலை உணவின் வாயிலாக பாரம்பரியத் தமிழ்க் கலாசாரத்தைப் பறைசாற்றுவதற்கும் இந்நிகழ்வு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

இந்நிகழ்வில், பாரம்பரிய தென்னிந்திய சைவ மற்றும் அசைவ உணவுகள் வாழையிலையில் பரிமாறப்பட்டன. வாசனைமிக்க பாஸ்மதி சோறு,  சுவையான கோழி மற்றும் ஆட்டுக்கறி குழம்பு, வறுவல், காய்கறிகள், அப்பளம் மற்றும் பாயாசம், கருப்பட்டிக் கேசரி போன்ற இனிப்பு வகைகள் என பல்வேறு உணவுகள் பரிமாறப்பட்டன. குழந்தைகள் மூதல்  பெரியவர் வரை விரும்பும் பனிக்கூழும் கூடுதலாக வழங்கப்பட்டது அனைவரையும் மகிழ்வித்தது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்  உள்ளடங்கிய 100-க்கும் மேற்பட்டோர் குழுவாக இணைந்து இந்த நிகழ்வைத் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்தினர். அவர்களின் அயராத உழைப்பின் பலனாக, நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. மேலும், சுமார் RM30,000 நிதியும் திரட்டப்பட்டது. இந்தத் தொகை பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். 

பெற்றோர் ஆசிரியர் சங்கம், இந்த நிகழ்வில் பங்களித்த அனைத்து தன்னார்வலர்கள், நன்கொடையாளர் மற்றும் நிகழ்வின் ஆதரவாளர்களுக்குத் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உதவி இந்நிகழ்வின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், உணவு தயாரிப்பு மற்றும் நிகழ்விட அமைப்பு சேவைகளை  வழங்கிய PUNIMAS Sdn. Bhd. நிறுவனத்தின் தலைவர் டத்தோ புவனேஸ்வரன் உத்ராட்சம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது. 

இந்நிகழ்வில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙெ கோ ஹாம் அவர்களின் இந்திய சமூக நலப்பிரிவு சிறப்பு அதிகாரியான, திரு தினகரன் கோவிந்தசாமி,  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் உரையாற்றி, பெருவாஸ் நாடாளுமன்றத்திலிருந்து RM3,000 நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அவர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கக் கூடியதென அதன் தலைவர் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளும் இது போன்ற நிகழ்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டர்.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset