நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொலிவியாவில் வரலாறு காணாத வெள்ளப்பேரிடர்: அவசரநிலை அறிவிப்பு

லா பஸ்: 

கடந்த நவம்பர் மாதம் முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் வரலாறு காணாத வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது 

இந்த வெள்ளப்பேரிடரால் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிவியா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 

வெள்ளப்பேரிடரைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது 

இதனால் அதிகமான மீட்புத்துறை அதிகாரிகள், இராணுவ வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்டவர்களை மீட்க வழிவகை செய்ய முடியும் என்று அரசாங்கம் தெளிவுப்படுத்தியது 

பருவநிலை மாற்றம் காரணமாக பொலிவியாவில் இந்த அசாதாரண வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள அரசு சாரா அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது 

3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் அனைத்து ஒன்பது பிராந்தியங்களிலும் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் லுயிஸ் அர்கே கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset