நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நோன்புப் பெருநாள் விடுமுறையில் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்: சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை

சிங்கப்பூர்:

நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியில் ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூர் பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகள் இரண்டிலும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 28ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான நீண்ட வார இறுதியில், சிங்கப்பூரில் பொது விடுமுறை என்பதால், குடிநுழைவு சோதனைக்கு ஆகும் கூடுதல் நேரத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு ஆணையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.

மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய இரு நாள்களும் மலேசியாவில் பொது விடுமுறை என்று ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூரின் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜோகூருக்குள் மார்ச் 14 முதல் 24 வரை 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இரு நிலச் சோதனைச் சாவடிகளையும் கடந்தனர். இதில் மார்ச் 15 முதல் 23 வரையிலான பள்ளி விடுமுறையும் அடங்கும்.

மார்ச் 17ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் 550,000க்கும் மேற்பட்டவர்கள் இரு சோதனைச் சாவடிகளையும் கடந்தனர். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கார்ப் பயணிகள் குடிநுழைவு சோதனைகளை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருந்தனர் என்று ஆணையம் தெரிவித்தது.

2024 டிசம்பர் 20ஆம் தேதி, ஒரே நாளில் ஆக அதிகமாக 563,000 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்தனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset