நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணம்: 50 சதவீதம் தள்ளுபடி

புத்ராஜெயா:

நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசாங்கம் டோல் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி இதனைக் தெரிவித்தார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு வழக்கமான டோல் கட்டண விகிதத்திலிருந்து 50 சதவீத கட்டணக் குறைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட கட்டண சலுகையை முன்னிட்டு டோல் நிறுவனங்களுக்கு இழப்பீடாக  19.69 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கவுள்ளது.

மடானி அரசாங்கம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 

மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, மார்ச் 29 (சனிக்கிழமை) இரவு 11.59 மணிக்கு முடிவடையும் வரையில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பை வழங்க ஒப்புக் கொண்டது.

மக்கள்  அவசரப்படாமல் இருக்க வேண்டும்.

தங்கள் பயணத்தை சிறப்பாக திட்டமிடவும் நாங்கள் இரண்டு நாட்கள் தள்ளுபடி வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset