நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கடப்பிதழை மறந்த விமானி: விமானம் திரும்பியது

லாஸ் எஞ்சல்ஸ்: 

அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் நகரிலிருந்து சீனாவின் ஷங்ஹாய்(Shanghai) நகருக்குச் சென்று கொண்டிருந்த United Airlines விமானம் ஒன்று பாதி வழியில் சான் பிரான்சிஸ்கோவிற்கு திருப்பிவிடப்பட்டது.

விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு விமானி கடவுச்சீட்டை எடுத்து வரவில்லை என்பது தெரியவந்தது.

சம்பவம் கடந்த சனிக்கிழமை (22 மார்ச்) நடந்தது.

சுமார் 250 பயணிகளும் 13 சிப்பந்திகளும் அந்த விமானத்தில் இருந்தனர்.

சான் பிரான்சிஸ்கோவில் இறங்கிய பயணிகளைப் பார்த்துக் கொள்ள மற்றொரு சிப்பந்திக் குழு ஏற்பாடு செய்யப்பட்டது.

பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டும் இழப்பீடும் கொடுக்கப்பட்டது.

அன்று இரவே பயணிகள் வேறொரு சிப்பந்திக் குழுவோடு ஷங்ஹாய் சென்று சேர்ந்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset