நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பூப்பந்து சங்கத்தை வழிநடத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தார்: தெங்கு ஸப்ருல் தகவல் 

கோலாலம்பூர்: 

2025-2029ஆம் ஆண்டு தவணைக்கான மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைமைத்துவத்தை வழிநடத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனக்கு இணக்கம் தெரிவித்ததாக அனைத்துலக வாணிப, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் கூறினார் 

டத்தோஶ்ரீ அன்வார் இந்த இணக்கத்தைத் தெரிவித்ததன் வாயிலாக BAM தலைமை பொறுப்பை ஏற்கவிருப்பதாக தெங்கு ஸப்ருல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் 

மலேசியப் பூப்பந்து சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் எதிர்வரும் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் தெங்கு ஸப்ருல் நியமனம் பற்றி அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கு வர ஆதரவும் இணக்கமும் தெரிவித்த பிரதமர் அன்வாருக்குத் தெங்கு ஸப்ருல் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset