நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909ஆக குறைந்தது

ஜொகூர்பாரு:

ஜொகூரில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 275 குடும்பங்களைச் சேர்ந்த 909 ஆக உள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் அஸ்மி ரோஹானி இதனை கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பத்து பஹாட், பொந்தியான் ஆகிய இரண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயங்கும் 10 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பத்து பஹாட் மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பொந்தியான் மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset