நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள  நகைகள் கொள்ளை; 12 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: போலிஸ்

ஷாஆலம்:

கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு தங்கக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் தொடர்பாக சாட்சிகள், சந்தேக நபர்கள் உட்பட 12 நபர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இதன் வாயிலாக இச்சம்பவம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக 12 நபர்களின் வாக்குமூலங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

கடந்த சனிக்கிழமை, மாலை 4.56 மணியளவில் பேரங்காடியில் அமைந்துள்ள தங்கக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து போலிசாருக்கு புகார் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் ஏழு தட்டு நகைகளைத் திருட துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு 2 மில்லியன் ரிங்கிட்  என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர் ஒரு காரில் தப்பிச் சென்றார்.

மறு நாள் உலு சிலாங்கூர் புக்கிட் பெருந்தோங்கில் சந்தேக நபராக சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் நபரை போலிசார் கைது செய்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset