நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விற்பனையாளர் இன ரீதியாக திட்டிய  சம்பவம் குறித்து போலிஸ் விசாரிக்க வேண்டும்: ஆரோன் அகோ

புத்ராஜெயா:

ஷாஆலமில் ஒரு விற்பனையாளர் இன ரீதியாக திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலிசார் விசாரிக்க வேண்டும்.

தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இதனை வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் பல இன, பல மத சமூகத்தில் இருக்கக்கூடாத இனவெறி வார்த்தைகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது/

இதனால் இவ்விவகாரத்தில்  தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எந்தவொரு இனத்தையும் அவமதிக்கும் எந்தவொரு வடிவத்திலும் அமைச்சகம் சமரசம் செய்யப்படாது.

குறிப்பாக இனவெறி நடவடிக்கைகள் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக டயாக் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விற்பனையாளரை   வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாக திட்டியது சமூக ஊடகங்களில் வைரலானது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset