நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து ஆலயங்களுக்கு எதிராக இனவெறி கொண்ட முகநூல் பக்கத்தை எம்சிஎம்சி முடக்க வேண்டும்: மஹிமா

கோலாலம்பூர்:

இந்து ஆலயங்களுக்கு எதிராக இனவெறி கொண்ட முகநூல் பக்கத்தை எம்சிஎம்சி உடனடியாக  முடக்க வேண்டும்.

மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார்  இதனை வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட பக்கத்தில் உள்ள எழுத்தாளர்கள், வர்ணனையாளர்கள் ஏன் சிறுபான்மையினரை குறிவைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் இனங்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட சிறிய  ஆலயங்கள் கட்டுமானத் தொழிலாளர்களால் கட்டப்பட்டிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட ஆலயங்களை கட்டுவது  இந்து தொழிலாளர்களால் மட்டுமல்ல. சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களாலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

உண்மையில், இந்த சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டதற்குக் காரணம். அவர்களில் சிலர் கட்டுமானப் பணிகளைச் செய்து கொண்டிருந்திருக்கலாம். 

மேலும் அவர்கள் கடவுள் நம்பிக்கை,  பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்திருக்கலாம்.

பின்னர் கட்டுமான பணிகள் முடிந்ததும், அதை நகர்த்த மறந்து விடக்கூடும் என்று அவர் கூறினார்.

வரலாற்றில் நாடு வளர்ச்சியடைவதற்கு முன்பு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த பகுதியில், 

பழைய,  பெரிய ஆலயங்கள் தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்டன.

காடுகள் அழிக்கப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டதன் மூலம் ஆலயங்கள் பொதுமக்களுக்குத் தெரியும்படி மாறியுள்ளன.

இந்த விஷயத்தில் யாரைக் குறை கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை.

அந்த நேரத்தில் நிலங்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களுக்கி  தெளிவாகத் தெரியவில்லை.

ஏனென்றால் இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அந்தப் பகுதி யாருடையது? என்று அவர்களுக்கு தெரிந்திருக்காது.

ஆக இந்தப் பிரச்சினையை நிர்வகிக்க அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
 
மேலும் மஹிமா தற்போது ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கான மாஸ்டர் பிளானை  தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset