நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ், தீயணைப்புப்படை அதிகாரிகள் உட்பட பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி; மஇகா இளைஞர் பிரிவின் சார்பில் வழங்கப்பட்டது: அர்விந்த் கிருஷ்ணன்

கோலாலம்பூர்: 

போலிஸ், தீயணைப்புப்படை அதிகாரிகள் உட்பட பொது மக்களுக்கு மஇகா இளைஞர் பிரிவின் சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார்.

இஸ்லாமியர்கள் அடுத்த வாரம் நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் நோன்பில் இருப்பவர்களுக்கு இன்று நோன்பு கட்சி வழங்கப்பட்டது.

குறிப்பாக 218ஆவது போலிஸ் தினத்தை முன்னிட்டு டாங் வாங்கி போலிஸ் அதிகாரிகளுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

அதே வேளையில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பொதுமக்களுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 350க்கும் மேற்ப்பட்ட நோன்பு கஞ்சி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமை தொடர்ந்து நிலை நாட்டப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் இந்த நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset