நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலயப் பிரச்சினை இறுதியாக தீர்வு காணப்பட்டது: ஜலேஹா

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சினை
இறுதியாக தீர்வு காணப்பட்டது.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

ஆலய நிர்வாகம் ஒரு புதிய இடத்திற்கு ஆலயத்தை  மாற்ற ஒப்புக் கொண்டுள்ளது.

தற்போதைய ஆலயத்தில் இருந்து 50 அடி தூரத்தில் ஆலயத்திற்கான புதிய நிலம் உள்ளதும் குறிப்பாக அது 4,000 சதுர அடியில் ஆலயத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய நிலத்தின் அளவு தற்போதுள்ள ஆலயத்தின் அளவிற்கு சமமாகும்.

இந்த தளம் பிடி 95 லோட், பிரிவு 40இன் ஒரு பகுதியாகும்.

புதிய நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஆலய நிர்வாகமும் இதை ஒப்புக்கொள்கிறது என்று  செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset