நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகநூல் பதிவில் இஸ்லாத்தை அவமதித்த ஆடவர் காவல்துறையினரால் கைது: டான்ஶ்ரீ ரஸாருடின் தகவல் 

கோலாலம்பூர்: 

முகநூல் பதிவில் இஸ்லாத்தை அவமதித்த ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்ததாக அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார் 

57 வயதான சந்தேக நபர் ஜொகூர் மாநிலத்தில் மதியம் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். 

இஸ்லாம் சமயத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக அவரின் பதிவுகள் அமைந்துள்ளதை டான்ஶ்ரீ ரஸாருடின் சுட்டிகாட்டினார் 

1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233 இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. 

அத்துடன் அதே சட்டத்தின் குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 298ஏ பிரிவின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset