நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பூப்பந்து சங்கத்தை வழிநடத்த தெங்கு ஸப்ருல் முதன்மை வேட்பாளராக உள்ளார் 

கோலாலம்பூர்: 

மலேசிய பூப்பந்து சங்கம் அதன் புதிய தலைமைத்துவத்தைத் தேடும் பணியில் உள்ளது. இதனால் 2025-2029 ஆம் ஆண்டு தவணைக்கான புதிய தலைமைக்கு அனைத்துலக வாணிப, தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் முதன்மை வேட்பாளராக இருக்கிறார் 

பி.ஏ.எம் சங்கத்தின் இடைக்கால தலைவர் வி.சுப்ரமணியம் இந்த தகவலைத் தெரிவித்தார் 

BAM சங்கததின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தெங்கு ஸப்ருலை பூப்பந்து சங்கத்தின் தலைவராக வருவதற்கு ஆதரவு அளித்துள்ளனர் 

இந்த முடிவு தொடர்பாக துங்கு ஸப்ருலிடம் தெரிவிக்கப்பட்டு அவரும் இணக்கம் தெரிவித்ததாக சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் 

எதிர்வரும் மே 10ஆம் தேதி முதல் மலேசியப் பூப்பந்து சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  அந்த கூட்டத்தில் புதிய தலைமை தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset