நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் விவகாரம் சுமூகமான முறையில் தீர்வு: தற்போது இருக்கும் இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் இடமாற்றம் செய்யப்படும்: டத்தோஶ்ரீ எம்.சரவணன் தகவல் 

கோலாலம்பூர்: 

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் பிரச்சனைக்குச் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டிருக்கிறது 

தற்போது ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் ஆலயம் இடமாற்றம் செய்ய நிலம் வழங்கப்பட்டிருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக  கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலெஹா முஸ்தஃபா, ஆலயத் தலைவர் பார்த்திபனுடன்  சந்திப்பு நடத்தி அதற்கான உறுதி கடிதத்தையும் வழங்கினார் 

இதனால் தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார் 

அதேநேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நிரந்தர நிலப்பட்டா கொடுக்கப்படும்

தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் புதிய நிலத்தில் கட்டி முடிக்கபடும் வரை தற்போது உள்ள இடத்தில் ஆலயம் இயங்குவதற்குக் கூட்டரசு பிரதேச அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது 

இது மலேசிய வாழ் இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாகும். இவ்வேளையில் அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கும் இந்த ஆலயத்தைப் பாதுகாக்க போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் நன்றியினைத் தெரிவித்தார்

முன்னதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலெஹாவுடன் ஆலய பிரதிநிதிகள், இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பு நடத்தினர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset