செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்: சூடான விவாதங்கள் நடந்ததாக ஒப்புக்கொண்டார் அன்வார்
கோலாலம்பூர்:
மலாக்கா அரசு கவிழ காரணமாக இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் வரும் தேர்தலில் களமிறக்கப்படுவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.
அந்நால்வரில் இருவருக்கு தேர்தலில் வாய்ப்பளிப்பதா இல்லையா என்பது குறித்து கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெற்றதாக ஒப்புக்கொண்ட அவர், அந்த விவாதங்கள் தற்போது முடிவுக்கு வருவதாகக் கூறினார். அவர் மறைமுகமாக குறிப்பிட்ட இத்ரிஸ் ஹாரூன், நோர் அஸ்மான் ஹசன் (Idris Haron, Nor Azman Hassan) ஆகிய இருவரும் முன்பு அம்னோ சார்பாக சட்டமன்றத்துக்கு தேர்வு பெற்றவர்கள் ஆவர்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் நேற்று இரவு தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த இருவரைத் தவிர பெர்சாத்துவின் நூர் எஃபண்டி அஹ்மத் (Noor Effandi Ahmad) குறித்து முடிவெடுக்கும்போதும் பக்காத்தான் உறுப்புக்கட்சிகள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனெனில், இந்த முடிவானது, தேர்தல் களத்தில் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அன்வார் தமது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த மாதம் மேற்குறிப்பிட்ட மூவருடன் சுயேச்சை உறுப்பினரான நோர் ஹிசாம் ஹசன் பக்தீ (Norhizam Hassan Baktee)-யும் சேர்ந்து அப்போதைய மலாக்கா அரசாங்கத்துக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது. எதிர்வரும் 20ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆட்சி கவிழக் காரணமாக இருந்த நால்வருக்கு பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 9:53 pm
ரோபோடிக் கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்: ஆசிரியை ரூபிணி
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm
2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா
December 21, 2024, 4:44 pm
பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும் பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்
December 21, 2024, 2:37 pm
மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்
December 21, 2024, 2:28 pm