செய்திகள் மலேசியா
ரோபோடிக் கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்: ஆசிரியை ரூபிணி
ஸ்கூடாய்:
இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் " ரோபோடிக்" கல்வி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும். இந்த கல்வியானது எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய பேருதவியாக அமையும். குறிப்பாக, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் " ரோபோடிக்" கல்வித்துறையில் சிறந்த விளங்க தமிழ்ப்பள்ளிகளில் இதன் பயிற்சி பட்டறைகளை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக பள்ளியின் ஆசிரியையான ரூபிணி அருள்தாஸ் கூறினார்.
இதுவரை சுமார் 11 தமிழ்ப்பள்ளிகளில் இது தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடந்தேறி விட்டது. தற்போது இங்குள்ள ரினி தோட்ட தமிழ்ப்பள்ளியில் இந்த ரோபோடிக் பயிற்சி பட்டறை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அத்துடன், பெற்றோர்கள் வற்றாத ஆதரவை வழங்கினர் என்று அவர் குறிப்பிட்டார்.
ரினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இறுதியாக "ரோபோடிக்" உருவாக்கும் பயிற்சியை போட்டிகள் வாயிலாக திறமையை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இத்தகைய பயிற்சி பட்டறை வாயிலாக கணினியை பயன்படுத்தும் முறைகளை சுலபமாக மாணவர்கள் அறிந்துக்கொள்வார்கள். அத்துடன், இந்த ரோபோடிக்கை உருவாக்கும் அறிவை மாணவர்கள் கிடைக்கப்பெறுவார்கள். இதனால் எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் தொழில்முனைவராகவும், தொழிலதிபராகவும் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது இந்த ரோபோடிக் பயிற்சி பட்டறை ஜோகூர் மாநிலத்தில் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் மலேசியா முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளில் நடத்த அழைப்பு கினைத்தால் கண்டிப்பாக நடத்தப்படும் என்று அ.ரூபிணி கூறினார். மேலும் கூடுதல் தகவலுக்கு 012-3791523 ரூபிணியை தொடர்புக்கொள்ளலாம்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm
2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா
December 21, 2024, 4:44 pm
பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும் பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்
December 21, 2024, 2:37 pm
மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்
December 21, 2024, 2:28 pm