நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுப்பாடில்லாமல் உயரும் பொருட்களின் விலைகள்; இரண்டு வெள்ளிக்கு விற்ற தேங்காய் 3.30 க்கு விற்கப்படுகிறது; யார் வேண்டுமானாலும் விலையை உயர்த்தலாமா? பி.ப.சங்கம் கேள்வி

பினாங்கு:

ஆகக் கடைசியாக தேங்காயின் விலையும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை தந்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேங்காய் விலை கடுமையாக உயர்வு கண்டதை முன்னிட்டு
பினாங்கு சந்தைகளில் விற்கப்படும் தேங்காய்களின் விலையை தொட்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஓர் ஆய்வை மேற்கொண்டதாக அச் சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.

தேங்காய்களின் விலை படிப்படியாக உயர்ந்து மவெ 2.00 லிருந்து 2.50 ரிங்கிட்டாக ஆக உயர்ந்து பெரிய அளவிலான தேங்காய்கள் ஒவ்வொன்றும் 3.30ரிங்கிட்டிற்கு விற்பனை செய்வதாக  அவர் சொன்னார்.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, தேங்காய்ப்பாலின் விலையை அதிகரிக்க செய்துள்ளது.

ஒரு கிலோகிராம் தேங்காய் பாலின் விலை மவெ 12.00 லிருந்து மவெ மவெ15.00 வரை உயர்வு கண்டு, விற்கப்படுவதாக அவர் கூறினார்.

துருவிய தேங்காயின் விலை  8.00 ரிங்கிட்டிலிருந்து 11 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. 

இனி நமது இந்திய உணவங்களில் தேங்காய் சட்டினி கிடைக்குமா என்பது கேள்விகுறிதான்.

பிற நாடுகளிலிருந்து தேங்காயின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இப்பிரச்னை தொடங்கியதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

பல மளிகைக் கடைகளும் பொதுச் சந்தைகளும் கடந்த இரண்டு வாரங்களாக பொருட்களைப் பாதுகாக்க போராடி வருவதாகவும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற கவலையையும்  தெரிவித்தனர்.

இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset