
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர் வசந்த் அபிநந்தனை நெகிரி செம்பிலான் மாநில அரசு கௌரவித்தது
சிரம்பான்
கராத்தே தற்காப்புக் கலைப் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் வசந்த் அபிநந்தன் நெகிரி செம்பிலான் மாநில அரசால் “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் 2ஆம் ஆண்டில் பயிலும் வசந்த் அபிநந்தன், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் 2 முறை தங்கம் வென்றுள்ளார்.
அவரது தொடர்ச்சியான சாதனைக்காக நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முஸ்தாபா நாகூர் வசந்த் அபிநந்தனுக்கு “மாநில விளையாட்டுத் துறைக்கான சிறந்த சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.
சாதனை தொடர வேண்டும்
“வசந்த் அபிநந்தன் தனது திறமையால் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என அவர் வாழ்த்தினார்.
“வசந்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர்கள், குடும்பத்தினர், மேலும் இவரை கௌரவித்த மாநில அரசிற்கும் நன்றி” என அம்மாணவனின் தந்தை வசந்தகுமரன் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாணவரின் சாதனை, மற்ற இளைஞர்களுக்கும் ஒரு புதிய ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm