செய்திகள் மலேசியா
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோல திரெங்கானு:
சிலாங்கூர் எஃப்சி (Selangor FC) அணியின் 12 ஆதரவாளர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் வைத்திருந்ததும் பயன்படுத்தியதும் தொடர்பாக, இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
முதலாவதாக, முஹம்மது அமீருல் இஸ்ஹாம் அனுவா (26), பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், கோல திரெங்கானு மாவட்ட காவல் தலைமையக வளாகத்தில், 1.12 கிராம் எடையுள்ள கஞ்சா (கேனபிஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 (ADB), பிரிவு 6ன் கீழ் குற்றம் செய்ததாக கருதப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது RM20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், அதே தேதி, இடம், நேரத்தில், 0.37 கிராம் எடையுள்ள நிமெடஸிபாம் (Nimetazepam) போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் அந்த ஆடவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM100,000 வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த இரு குற்றச்சாட்டுகளும் ஒன்றாக வாசிக்கப்பட்டு, அவருக்கு RM5,000 ஜாமின் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அமீருல் இஸ்ஹாம் மீது உடலுக்குள் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், குவாலா திரெங்கானு போதைப்பொருள் விசாரணை பிரிவில், டெட்ராஹைட்ரோகேனபினால் (THC) என்ற போதைப்பொருளை உடலில் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM5,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை, போலீஸ் கண்காணிப்பு விதிக்கப்படலாம். இதற்காக அவருக்கு RM2,000 ஜாமின் வழங்கப்பட்டது.
இதனோடு, முஹம்மது அக்மல் ஹக்கிம் அப்த் அஜீஸ், 29, மொஹமட் அலிஃப் அய்மான் அப்துல்லா, 26, அசிராஃப் சயாஸ்வான் அஸ்மான், 25, அக்மல் ஹக்கிம் அமீர் ஹம்சா, 25, மற்றும் ஆடம் ஹக்கிமி மிஸ்ரா, 20 ஆகிய ஐவரும் THC போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் RM2,000 ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களின் வழக்கு ஆய்வு முடிவுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 4, 5, 6 தேதிகளில் மீண்டும் விசாரணைக்கு வரும் என மாஜிஸ்திரேட் இஃபா நபிஹா முகமது இஷாக் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, வேறு ஒரு நீதிமன்றத்தில், மேலும் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு RM2,500 ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
மொஹமட் ஷபிருல் ஹிஷாம் ஹசன், 26, முஹமட் சயாபிக் ஜுனேதி, 27, அஹ்மட் நகியுதீன் அஹ்மட் நோர்ட்ஸ்ரி, 29, அஹமட் ஜியாத் சுல்கிப்லி, 26, முஹம்மது அஃபிக் ஹைகல் குணவான், 27 ஆகியோர், பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவு 12.30 முதல் 3.20 மணி வரை, திரெங்கானு மாநில காவல் வளாகத்தில் THC போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அனைத்து குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோதும், எந்த குற்ற ஒப்புகையும் பதிவு செய்யப்படவில்லை.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 5:49 pm
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 5:33 pm
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள புதிய நடைமுறையை மைக்கி வரவேற்கிறது
February 5, 2026, 11:58 am
