செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா; இந்திய சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா மாற்றப்பட்டாலும், இந்தியர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதன் அடிப்படை நோக்கம் மற்றும் அதிகாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்த மாற்றமானது இந்திய சமூகத்தின் நல்வாழ்வு, சமூக முன்னேற்றம், மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் ஒருங்கிணைந்த முறையிலும் அதிக பயன் தரும் வகையிலும் செயல்படுத்த உதவும்.
மேலும் இது மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துகிறது.
இது தொடர்பாக, மித்ராவை மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வருவது அதன் கொள்கைகளைப் பாதிக்காது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருதுகிறார்.
மாறாக, இந்திய சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டுடன் இணைப்பதன் மூலம் மித்ராவின் செயல்பாடுகளை இது இன்னும் வலிமையாக்கும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
மனிதவள அமைச்சின் தற்போதைய வேலைப்பளு காரணமாக, மித்ராவை அங்கு மாற்றுவது இந்திய சமூகத்தின் நலனைப் பாதிக்காது என்பதற்கு அரசாங்கம் தரும் உத்தரவாதம் என்ன என்று சபாக் பெர்னாம் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சாலான் எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.
மித்ரா திட்டங்களின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை இன்னும் முறையான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதை இந்த மாற்றம் உறுதி செய்யும்.
இது மனியவள அமைச்சின் கீழ் உள்ள வேலைவாய்ப்புத் திறன், திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளோடு ஒத்துப்போவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 11:14 pm
டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது: டத்தோ அப்துல் ஹமித்
February 5, 2026, 11:13 pm
பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை; சீனப் பள்ளியின் தரத்தைப் பாதிக்காது: ஃபட்லினா
February 5, 2026, 6:50 pm
மலேசியாவில் பதிவான முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்
February 5, 2026, 5:49 pm
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 5:33 pm
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
