செய்திகள் மலேசியா
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
கோலாலம்பூர்:
9 பிப்ரவரி 2026 முதல் தகுதி பெற்ற மலேசியர்களுக்கு SARA உதவித் தொகை வழங்கப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை வழங்கப்படும் RM100 நிதி நேரடியாக மக்களின் அடையாள அட்டைக்கு (MyKad) மாற்றப்பட உள்ளது. இது நாட்டின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மேலும் மக்களின் வாழ்வாதார செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது.
18 வயது முதல் உள்ள அனைத்து மலேசிய மக்களுக்கும் RM2.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்த விண்ணப்பம் இன்றி அவர்கள் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
“9 பிப்ரவரி 2026 அன்று, 18 வயது மேற்பட்ட அனைத்து மலேசிய மக்களும் RM100 SARA நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
“இதற்கு விண்ணப்பங்கள் தேவையில்லை. இது தானாகவே MyKad-க்கு மாற்றப்படும். 31 டிசம்பர் 2026 வரை மக்கள் இதனை பயன்படுத்தலாம். தகுதி உடையவர்கள் தங்களின் பெயர்களை இன்று sara.gov.my இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, முன்னதாக அதிக பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்த அடிப்படை SARA செயல்படுத்தலை நிறைவு செய்கிறது. தொடர்ந்து, அனைத்து மலேசியர்களும் இவ்வுதவியைப் பெற்று பயன் பெறுவர் என்பதையும் உறுதி செய்கிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 6:50 pm
மலேசியாவில் பதிவான முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 5:33 pm
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
