நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது: டத்தோ அப்துல் ஹமித்

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

நாட்டில் பல்வேறு தொழில் துறைகள் அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் பல நெருக்கடிகளை சந்திக்கின்றன.

குறிப்பாக பல தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாளிகள் அந்நிய தொழிலாளர்களை நேரடியாக தருவிக்கும் நடைமுறையை அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

இது தொழிலாளர் சார்ந்த துறைகளில் பணிபுரியும் முதலாளிகளுக்கு, நம்பகமான, வெளிப்படையான, சட்டபூர்வமான அந்நியத் தொழிலாளர்களை அணுகுவது என்பது இனி ஒரு செயல்பாட்டுக் கவலையாக இருக்காது என்று அவர் கூறினார்.

அரசாங்க திட்டங்களில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், திடீர் முடக்கங்கள், பணியமர்த்தல் காலங்களை மீண்டும் திறப்பது, அத்துடன் வரி கட்டமைப்புகளில் திருத்தங்கள் ஆகியவற்றால் அதிகரிக்கின்றன.

இவை அனைத்தும் வணிகங்களுக்கு நீண்டகால மனிதவளத் திட்டமிடலை மிகவும் கடினமாக்குகின்றன.

ஆக நேரடி பணியமர்த்தல் வழிமுறை முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருவருக்கும் பயனளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset