செய்திகள் மலேசியா
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
சிரம்பான்:
மீதமான உணவைக் கழுவி மீண்டும் சமைத்து விற்பனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட உணவகம் 14 நாட்களுக்கு மூடும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு 1983 ஆம் ஆண்டின் உணவு சட்டத்தின் பிரிவு 11 கீழ் வழங்கப்பட்டு, உணவு சுகாதார விதிமுறைகள் 2009 கீழ் அபராத அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் (JKNNS) மாநில சுகாதாரத் துறை, தெரிவித்துள்ளது.
“உணவக உரிமையாளர்கள், வணிகர்கள், உணவு பராமரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது.
“உணவு பராமரிப்பு, பாதுகாப்பைப் புறக்கணித்தால் நச்சுணவு போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. JKNNS எப்போதும் பயனீட்டாளரின் பாதுகாப்பை மீறக்கூடிய விஷயங்களுக்கு கடுமையாகக் கருதுகிறது,” என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, உணவு பாதுகாப்பை முன்னுரிமையாக வைப்பது முக்கியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்களைத் தேர்வு செய்யும் போது “கவனித்து தேர்வு செய்யவும்”, “பார்த்தல், நுகர்தல், சுவைத்தல்” என்ற நச்சுணவத் தவிர்க்கக்கூடிய எளிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில் ஒரு உணவகத்தின் ஊழியர் மீதமான உணவுகளை அடுத்த நாள் பயன்படுத்த கழுவிய காணொலி புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 5:49 pm
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 5:33 pm
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள புதிய நடைமுறையை மைக்கி வரவேற்கிறது
February 5, 2026, 11:58 am
