நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை; சீனப் பள்ளியின் தரத்தைப் பாதிக்காது: ஃபட்லினா

கோலாலம்பூர்:

பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை சீனப் பள்ளியின் தரத்தைப் பாதிக்காது.

கல்வியமைச்சர்  ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

சீன பள்ளிகளில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்கின்றனர்.

இது அப்பள்ளிகளிம் கற்பித்தல், கற்றல் தரத்தை பாதிக்காது .
மாறாக, பள்ளிகளில் பல இன மாணவர்களின் பங்கேற்பு தேசிய கல்வி முறையின் இலக்குகளுக்கு ஏற்ப தேசிய ஒற்றுமையின் கூறுகளை வலுப்படுத்த உதவுகிறது.

சீனப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் மொழி சீன மொழியாகவே உள்ளது.

அதே நேரத்தில் தேசிய பாடத்திட்டத்தின்படி மலாய், ஆங்கிலம் கட்டாய பாடங்களாக தொடர்ந்து கற்பிக்கப்படுகின்றன.

சீன மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர்களுக்கு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் செயல்படுத்தப்படும் மாறுதல் திட்டங்கள், மொழி தலையீடுகள், வேறுபட்ட கற்பித்தல் அணுகுமுறைகள் மூலம் உதவி வழங்கப்படுகிறது என்று அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset