நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்

கோலாலம்பூர்:

2025 ஆம் ஆண்டில் SARA உதவித் திட்டத்தின் கீழ் 56 லட்சம் பயனாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்த தகுதி தொகை RM4.8 பில்லியனை எட்டியுள்ளது.

STR  திட்டத்தின் கீழ் உள்ள பெரும்பாலான SARA பெறுநர்கள், பதிவு செய்யப்பட்ட கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க MyKad-ஐ பயன்படுத்தியுள்ளனர்.

இதன் பயன்பாட்டு விகிதம் 99 சதவீதமாகவும், மொத்த பரிவர்த்தனை மதிப்பு RM5 பில்லியன் ஒதுக்கீட்டில் RM4.8 பில்லியனாகவும் இருந்துள்ளதாக நிதியமைச்சர் II, டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறியுள்ளார்.

“ஒருமுறை மட்டும் வழங்கப்படும் SARA உதவித் தொகையின் கீழ், 2.1 கோடிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் அதாவது 96 சதவீதம் மக்கள் அதனை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உள்ளூர் சந்தையில் RM2.05 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன,” என்றார் அவர்.

மேலும், விதிமுறைகள், அனுமதி காலம், காய்கறி, இறைச்சி போன்ற பொருட்களை SARA பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தரம், உணவு பாதுகாப்பு, பயனாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதியளவில், SARA திட்டத்தில் பங்குதாரர்களாக உள்ள கடைகளின் எண்ணிக்கை 2024 இல் இருந்த 700-இலிருந்து, தற்போது நாடு முழுவதும் 10,700 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் சுமார் 3,000 சிறு வியாபாரிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டில், சம்பந்தப்பட்ட மளிகை கடைகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும், இதனால் பயனாளர்களுக்கான சராசரி தூரம் 10 கிலோமீட்டரிலிருந்து 7 கிலோமீட்டராக குறையும் என்றும் கூறினார்.

“ஆவணங்கள் முழுமையாக கிடைத்தால், இரண்டு வாரங்களுக்குள் SARA விண்ணப்பங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான மேம்பாடுகள் காலந்தோறும் பரிசீலிக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset