நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர் 

நியூ யார்க்: 

அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் மீது 214 மில்லியன் அமெரிக்க டாலர்"பம்ப்-அண்ட்-டம்ப்" முதலீட்டு மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மலேசியர்கள் லிம் சியாங் ஜீ, கோ சென் சாய், கிங் சங் வோங், சியோங் வீ வுன் மற்றும் கோக் வா வோங் ஆகியோர் என்றும், அவர்கள் இரண்டு தைவான் நாட்டவர்களான சியென் லுங் மா மற்றும் மிங்-ஷென் செங் ஆகியோருடன் சேர்ந்து மிதமிஞ்சிய லாபத்திற்காக பங்கு விலைகளை கையாண்டதாகக் கூறப்படுகிறது.

"அவர்கள் செய்த தவறான விளம்பரத்தினால் பங்கு வர்த்தகத்தில் செயற்கையாக விலையை உயர்த்தி விளையாடி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஆயிரக்கணக்கான பங்குகளை விற்று மில்லியன் கணக்கான டாலர்களை லாபம் ஈட்டினர்" என்று குற்றப்பத்திரிகை கூறியது.

"பம்ப்-அண்ட்-டம்ப்" திட்டம் என்பது, பங்குகளை லாபத்தில் விற்பதற்கு முன்பு, தவறான விளம்பரங்கள் மூலம் ஒரு பங்கின் விலையை செயற்கையாக உயர்த்தி, மற்ற முதலீட்டாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset