நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கம் நடத்திய நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பென்கூலன் பள்ளி 3-ஆம் தளத்தில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம், அதன் சுற்றுப்புற ஊர்களை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். 

நிகழ்வின் தொடக்கமாக மாணவர் அம்மார் இறைவசனங்களை ஓதினார்.  அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை மாணவர் ஹம்ஜா ஹாரூனும் தமிழ் மொழிபெயர்ப்பை மாணவர் முஹம்மது ஹஃபிஸும் வாசித்தனர்.  

சங்கத்தின் தலைவர் ஜெஹபர் சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.   குடும்ப நலன், கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்,  இளைஞர்களிடையே தலைமைத் திறன்களை வளர்த்தெடுத்தல், பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட சிங்கப்பூரில், பிற சமூகங்களுடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கத்துடன் வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவை தமது சங்கத்தின் நோக்கங்களாக இருக்கின்றன என அவர் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து சங்கத்தின் துணை செயலாளர் ஹாரூன் பிலால் சிறார்களுக்கான இஸ்லாமிய வினா விடை நிகழ்ச்சியை நடத்தினார்.  அதில் கலந்து கொண்ட சிறார்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.  

பென்கூலன் மஸ்ஜித் இமாம் மௌலானா கலீல் அஹ்மத் ஹஸனி நோன்பின் சிறப்புகளைப் பற்றி சிற்றுரை நிகழ்த்தி பின் மனமுருக துஆ எனும் பிரார்த்தனை செய்தார்.  

நிகழ்ச்சிக்குச் சங்கத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஹைதர் அலி (சுல்தான்), மருத்துவர் சாஹுல் ஹமீது, சமாதான நீதிபதி ஹாஜா நிஜாமுதீன் JP, PBM, பென்கூலன் பள்ளியின் தலைவர் ஹாஜி M Y முஹம்மது ரபீக் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.      

சங்கத்தின் தலைவர் ஜெஹபர் சாதிக், துணைத் தலைவர் ஜியாவுதீன், செயலாளர் சலாஹுத்தீன், பொருளாளர் அப்துர் ரஹீம் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset