
செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது: டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் உறுதியாக கூறினார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் 130 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும்.
இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் இந்த நிலத்தில் பள்ளிவாசல் கட்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் இப்பிரச்சினை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்காக உள்ளது.
பிரதமரின் வலியுறுத்தலின் அடிப்படையில் நான் இவ்வாலயத்திற்கு வந்தேன்.
ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதே வேளையில் பொதுமக்களும் பல கோரிக்கைகளை முன்வைத்தேன்.
இவ்வாலயம் இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
எது எப்படி இருந்தாலும் மடானி அரசாங்கத்தில் எந்தவொரு ஆலயமும் உடைக்கப்படாது.
இதற்கான வாக்குறுதியை நான் வழங்குகிறேன்.
அதே வேளையில் அவர்களின் கோரிக்கைகள் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
குறிப்பாக இவ்வாலய பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுக் காணப்படும்.
இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am