
செய்திகள் மலேசியா
ஜொகூரில் வெள்ளம்: 10 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
ஜொகூர் பாரு:
கனமழையைத் தொடர்ந்து ஜொகூரில் மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணியளவில் பத்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
257 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று
அம்மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் அஸ்மி ரோஹானி கூறினார்.
ஜொகூர் பாரு, கூலாய், பொந்தியான் ஆகுட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜொகூர் பாருவில் 567 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூலாயில் 269 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து, பொந்தியானில் 57 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஆறுகள் அபாய அளவைத் தாண்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஜொகூரில் உள்ள பத்து மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும் என்று மெட்மலேசியா தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm